Share on Social Media


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவுகளைப் படையலிட்டனர். பழம், ஸ்வீட், காரம், பிஸ்கட், சமைத்து எடுத்த வந்த பலகாரம் ஆகியவற்றை வைத்தனர். மலர் வளையம் வைத்தும், பூக்களைத் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவத்தி ஏற்றி அமைதியாக மனம் உருகினர். எல்லோரது கண்களிலும் தானாகவே கண்ணீர் கசிந்தன. நீண்ட நேரம் அந்த இடத்தில் அமைதியாக நின்றனர். பின்னர் இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்திற்குச் சென்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

தீ விபத்தில் மகனை இழந்த ஜெயலெட்சுமியிடம் பேசினோம். “என்னோட மூத்த மகன்களான நீலகண்டன் 3-ம் வகுப்பும், ஜீவானந்தம் 2-ம் வகுப்பும் இந்தப் பள்ளியில் படிச்சாங்க. தீடீர்னு தீப்பிடிச்சு எரிஞ்சப்ப நீலகண்டன், தன்னோட தம்பி ஜீவானந்தத்தைக் காப்பாத்தப் போய் நெருப்புல சிக்கி இறந்துட்டான்.

17ம் ஆண்டு நினைவு தினம்

17ம் ஆண்டு நினைவு தினம்

இளையவன் ஜீவா எப்படியோ தப்பிச்சுட்டான். ஆனா வீட்டுக்கு வராம ஸ்கூல் வாசலிலேயே அண்ணனுக்காக ரொம்ப நேரம் நின்னான். அண்ணன் வந்தாதான் வருவேன்னு அடம் பிடிச்சான். கடைசியா அவன் கரிக்கட்டையா வந்ததப் பார்த்து அதிர்ச்சியடைந்தவன் ரெண்டு மாசம் வரை பேசவே இல்லை. பின்னர் டாக்டர்கிட்ட கவுன்சிலிங் அழைச்சிக்கிட்டு போனோம். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேசத் தொடங்கினான். இன்னைக்கு ஜீவா காலேஜ் முடிச்சுட்டான்.17 வருஷம் ஆச்சு. ஆனாலும் அந்த நாள எங்க யாராலையும் மறக்க முடியலை” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *