Share on Social Media


சமுத்திரக்கனி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணியம் சிவா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி ஆகியோர் நடித்து, திரைக்கு வெளியாகயுள்ள திரைப்படம், ரைட்டர். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர்,பிராங்கிளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை, இயக்குநர் பா. இரஞ்சித், அபியெனந்த் சிங், பியூஸ் சிங், அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப், இயக்குநர் பா. இரஞ்சித்தின் துணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில்,ரைட்டர் படக்குழு அனைவரும் பங்கேற்று பேசினர். இதில், ரைட்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரான பா.இரஞ்சித், “என் படத்தில் தொழில் நுட்பதில் வேலைசெய்பவர்களுக்கு நடிப்பவர்களுக்கும் , இவர்கள் ரஞ்சித் படத்தில் வேலைசெய்கிறார்கள் என்று வட்டாரத்தை பிரித்துள்ளனர் , இதனால் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும்,ரைட்டர் திரைப்படத்தில் நடித்துள்ள, மெட்ராஸ் படத்தின் “ஜானி” புகழ், ஹரி கிருஷ்ணா குறித்து குறிப்பிட்டார், ஹரி கிருஷ்ணன் சிறப்பான நடிப்புத்திறன் கொண்டவர் என்றும், மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். ஆனால் அவர் இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், ரைட்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அதிதி ஆனந்தின் பைனான்சியர் பா. இரஞ்சிதுடன் வேலை செய்வதற்கு மறுத்து சென்றுவிட்டார் எனவும் குறிப்பிட்டார். என் உதவி இயக்குநர்கள் வெளியே சென்று கதை சொல்லும்போது, இவர்கள் பா. ரஞ்சித்தின் துணை இயக்குநர்கள் என்று வாய்ப்பு மறுக்கப்படுகிறது.வேலையை நேர்மையாக செய்யுங்கள், அது யாராலும் புறக்கணிக்க முடியாததாக உருமாறும் என்று தன் உதவி இயக்குநர்களிடம் கூறுவதாக பா.இரஞ்சித் குறிப்பிட்டார். மேலும்,பா. ரஞ்சித்தின் நீலம் பிரோடக்க்ஷன்ஸ் சார்பாக பொம்மை நாயகி, குதிரை வால், சேத்து மான், மாரி செல்வராஜின் திரைப்படம், மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதியின் படம் , அறிமுக இயக்குனர் ஆகிரேன் மோசசின் படம் போன்ற திரைப்படங்களை தயாரித்து வருவாதாக குறிப்பிட்டார்.ரைட்டர் திரைப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *