Share on Social Media

இந்நிலையில், என் தோழி என் அம்மா வீட்டில் தங்கி என்னைப் பார்த்துக்கொண்டபோது, என் அண்ணனும் வீட்டுக்கு வந்து சென்றார். பள்ளிக் காலத்தில் இருந்தே அவளை என் அண்ணன் அறிவார் என்றாலும், அதிகமாகப் பேசிக்கொண்டதில்லை. சென்ற வருடம், நாங்கள் மூன்று பேருமாக அமர்ந்து அரட்டை அடிப்பது, கார்ட்ஸ் விளையாடுவது என்று பொழுதைப் போக்கினோம். பேசினோம், சிரித்தோம், கதைகள் பகிர்ந்தோம். ஆனால், அதன் திசை சிக்கலாக மாறும் என்று அப்போது நான் உணரவில்லை.

தொடர்ந்த மாதங்களில், அண்ணன் மற்றும் தோழிக்கு இடையே ஓர் உறவு ஏற்பட்டிருக்கிறது. அதை நான் தாமதமாகவே அறிய நேர்ந்தது. அவர்கள் இருவரின் நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தை உணர்ந்த நான், `ஒருவேளை தப்பாக எதுவும் இருக்குமோ…’ என்று சந்தேகித்து, அதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என் நிம்மதி சுக்குநூறாக உடைந்துபோனது. இதைப் பற்றி என் அப்பா, அம்மாவிடம் சொன்னாலோ, கணவரிடம் சொன்னாலோ, `நீதான் தேவையில்லாம உன் ஃப்ரெண்ட்டை வீட்டுக்கு வரவெச்சு, இப்போ இவ்வளவு பெரிய பிரச்னையை உண்டாக்கிட்ட’ என்று என்னைத் திட்டுவார்கள். எனவே, இந்தப் பிரச்னையை நானே சரிசெய்ய எண்ணி, அண்ணனிடமும் தோழியிடமும் பேசினேன்.

woman (Representational image)

woman (Representational image)
Pexels

இருவருமே இல்லவே இல்லை என்று மறுத்தார்கள். என் தோழி, `நீ என்னை எப்படி சந்தேகிக்கலாம்? உனக்குப் போய் உதவ வந்தேன் பாரு…’ என்று என்னிடம் பெரிய சண்டைபோட்டு, என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். வாட்ஸ்அப்பிலும், அலைபேசி எண்ணிலும் என்னை பிளாக் செய்துவிட்டாள். என் அண்ணனோ, `அப்படியெல்லாம் எதுவுமே இல்ல. உனக்கு சந்தேகம் வந்ததுனு இல்லாத ஒண்ணைச் சொல்லி, நீ வீட்டுக்குள்ள தேவையில்லாத பிரச்னையைக் கொண்டுவந்து எல்லாரோட நிம்மதியையும் பறிச்சுடாத…’ என்று என்னைத் திட்டினார்.

இன்னொரு பக்கம், என் அண்ணன் அவருடன் சண்டைபோட்டுக்கொண்டு தன் அம்மா வீட்டுக்குச் சென்ற அண்ணியை மீண்டும் அழைத்து வர ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. என் அண்ணியிடம் நான் பேசி, `கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்க, வீட்டுக்கு வந்துடுங்க அண்ணி’ என்று எத்தனையோ முறை கூப்பிட்டுப் பார்த்தேன். அவரோ, `அப்படித்தான் நானும் கிளம்ப நினைக்கிறேன். அதை உங்க அண்ணன்கிட்ட சொல்லலாம்னு நினைக்கும்போதே, உங்க அண்ணன் போன்லேயே மறுபடியும் மறுபடியும் ஒரு சண்டையைப் போட்டு என்னை இன்னும் மனசு நோகச் செய்றார். பரவாயில்ல விடுங்க… பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸ்தானே… நான் இங்கேயே இருக்குறேன். என்னைக்கு உங்க அண்ணனுக்கு என் அருமை புரியுதோ, அப்போ அவர் வந்து என்னைக் கூப்பிடட்டும்’ என்று சூழல் புரியாமல் பேசுகிறார் அவர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *