Share on Social Media

புதுடில்லி: ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்று மல்யுத்த அரங்கில் உயர்ந்த நின்ற சுஷில் குமாரின் நிலை திடீரென தாழ்ந்துள்ளது.  முன்பு பதக்கம் கைப்பற்றி மூவர்ணக்கொடியுடன் கம்பீரமாக காட்சி தந்த இவர், நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது அவமானத்தால் முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டார். 

சுஷில் குமார் கைது குறித்து இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கூறுகையில்,‘‘ இந்தியாவுக்காக அவர் செய்த சாதனைகளை யாரும் அவரிடம் இருந்து பறித்து விட முடியாது. இதை மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும். மற்றபடி வழக்கு குறித்து சரியாக தெரியாத நிலையில் வேறு எதுவும் சொல்ல முடியாது,’’ என்றார்.

* அஜந்தா சரத் கமல், டேபிள் டென்னிஸ்

போலீசார் சொல்வது போல நடந்திருந்தால், அது துரதிருஷ்டவசமானது. மல்யுத்தத்திற்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டுக்கும் மோசமான நாள் தான். இந்தியாவின் சிறந்த வீரராகத் தான் அவரை எல்லோரும் பார்த்துள்ளனர். ஒருவேளை அவர் தவறு செய்திருந்தால் இனி எல்லோரையும் ரசிகர்கள் மோசமாகத் தான் பார்ப்பர்.

சுஷில் குமார் நெருங்கிய நண்பர், குத்துச்சண்டை வீரர் ஒருவர் கூறுகையில்,‘‘தற்போது அவர் கைது தான் செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தாரா, இல்லையா என்பது விசாரணையில்  தெரியவரும். எது எப்படி இருப்பினும் மல்யுத்தத்தின் மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு இது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பாருங்கள்,’’ என்றார். 

 

வெட்கக்கேடான செயல்

இந்திய ஹாக்கி முன்னாள் கேப்டன் அஜித்பால் சிங் கூறுகையில், ‘‘சுஷில் குமார், தன் வாழ்வில் பணம், புகழ் என அனைத்தையும் பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு ‘ரோல் மாடலாக’ இருக்கும் இவர், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இது மிகவும் வெட்கக்கேடானது. பீஜிங் ஒலிம்பிக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மேற்பார்வையாளராக இருந்த போது அவரை சந்தித்தேன். அப்போது மிகவும் அமைதியாக காணப்பட்டார். இச்சம்பவத்தின் மூலம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் கிடைக்கும் புகழை எப்படி கையாள்வது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *