Share on Social Media


கோவை: ‘நான் மிகவும் பழுதடைந்துள்ளேன்; என்னை உடனடியாக சரிசெய்து மக்கள் உயிரை காத்திடுங்கள்’ என, ஹோப்ஸ் சிக்னலில் இருந்து செல்லும் மசக்காளிபாளையம் ரோடு ‘பேசுவதை’அனைவரும் கவனித்து செல்கின்றனர்; மாநகராட்சி நிர்வாகம் தவிர.கோவை மாநகராட்சி பொறியியல் பிரிவு வாயிலாக பராமரிப்பு, ரோடு போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, 150 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை ரத்து செய்துள்ளது.இதனால், கந்தலாக கிடக்கும் ரோடுகளில், ‘பேட்ச் ஒர்க்’ கூட செய்ய முடியாத நிலை உள்ளது.மழைக்கு முன்பு, பாதாள சாக்கடை திட்டம், 24 மணி நேர குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.மழைக்கு, தாங்காத ரோடுகள் வாகன ஓட்டிகளுக்கு மரண பீதியை ஏற்படுத்தி வருகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர் கோரிக்கைகளையும், போராட்டங்களையும்முன்வைத்தாலும்,நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.இதனால், மக்கள் அனுபவிக்கும் சிரமத்தை பார்த்து, ஹோப்ஸ் சிக்னலில் இருந்து, மசக்காளிபாளையம் செல்லும் ரோடு,பொறுமை இழந்து ‘பேச’ துவங்கியுள்ளது.ரோடு பேசுவதாக, இப்பகுதி மக்கள் வைத்துள்ள போஸ்டரில், ‘நான் மசக்காளிபாளையம் சாலை பேசுகிறேன். மிகவும் பழுதடைந்துள்ள என்னை கொஞ்சம் கவனித்து, வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும். பொது மக்கள் நலன்கருதி, உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒரு நிமிடம் நின்று வேதனையுடன் கடந்து செல்கின்றனர். ஆனால், கண்டுகொள்ள வேண்டிய மாநகராட்சி நிர்வாகமோ மவுனம் காத்து வருகிறது.மசக்காளிபாளையம் மக் கள் கூறுகையில், ‘அவிநாசி ரோடு செல்லும் இந்த பிரதான ரோட்டில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட இந்த ரோடு, தற்போது படுமோசமாக உள்ளது. ‘பீக்’ நேரங்களில் பெரும் சிரமங்களை சந்திக்கிறோம். உடனடியாக சரி செய்ய வேண்டும்’ என்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *