Share on Social Media


இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ’ என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது.

“பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க. இனிமே இதையெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் அல்லது தவிர்த்துடணும்” என்று முடிவெடுத்து விடுகிறார்கள் பலர். பிள்ளைகளுக்குத் திருமணமாகியிருந்தாலோ `பேரன், பேத்தி எடுக்கிற வயசுல இதென்ன கருமம்’ என்று அருவருப்பு காட்டுகிறார்கள் சிலர். இதில் இன்னொரு வகையும் இருக்கிறது.

`இந்த ஆளு சின்ன வயசுல தினமும் தண்ணியடிச்சிட்டு வந்து என்னை அடிப்பான். எனக்கு விருப்பமில்லைன்னாலும் விட மாட்டான். இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்.’

இள வயதில் மனைவியை அவமரியாதையாக நடத்துகிற கணவர்களுக்கு, மத்திம வயதிலும் இறுதியிலும் மனைவியின் பராமரிப்பு வேண்டுமானால் கிடைக்கலாம். நட்பும் காமமும் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

Couple (Representational Image)

Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

திருமணமான புதிதில், பல காலம் அடக்கி வைத்த உணர்வை வெளிப்படுத்துகிற வேகத்துடன் இருக்கிற காமம், கருத்தரிப்பு, குழந்தை என்னும் அடுத்தகட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும். குழந்தைகள் வளர ஆரம்பிக்கையில், `ஒரு வாரம், இல்ல பத்து நாளைக்கு முன்னாடி சேர்ந்திருந்தோமா’ என்று ஞாபகப்படுத்திக் கொள்கிற அளவில்தான் பெரும்பாலும் தாம்பத்திய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடுத்தர வயதிலிருந்துதான், காமத்தை நிதானமாக அனுபவிக்க முடியும். ஆனால், இன்றைக்கு நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளிலும் இருக்கிற தம்பதிகளிடையேயான செக்ஸ் வாழ்க்கை பெரும்பாலும், காமத்தை நிதானமாக அனுபவிப்பதாக இல்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *