Share on Social Media


சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க,அனைத்து சுற்றுலா தளங்களுக்கும், சுற்றுலா பயணிகள் செல்ல, அரசு தடை விதித்தது.பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது, மாவட்டத்தில், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். சுற்றுலா மையம் இன்னும்திறக்கப்படாதால், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தமிழகத்தில், தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து, கொடைக்கானல் தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தைதிறக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் என உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிச்சாவரம் சுற்றுலா மைய வளாகத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ‘செல்பி பாய்ண்ட்’ புதியதாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா மையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கும் பட்சத்தில், சுற்றுலா பயணிகளுக்கு, கிருமி நாசினி, தெர்மா ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டுபடகு சவாரிக்கு அனுமதியளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார் தெரிவித்தார்.கட்டணம் உயர்வுபிச்சாவரம் வனக்காடுகளை, மோட்டார் படகில் சென்று சுற்றிப்பார்க்க கடந்த காலங்களில், 40 நிமிடத்திற்கு, ரூ. 1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது, ரூ. 200 கூடுதலாக ரூ. 1,700 வசூலிக்க உள்ளனர். துடுப்பு படகிற்கு, ஒரு மணி நேரத்திற்கு, கடந்த காலங்களில் ரூ. 340 பெறப்பட்டது. தற்போது, ரூ. 100 அதிகரித்து ரூ. 440 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *