Share on Social Media


புதுடில்லி: எதிர்க்கட்சிகள் , நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், நாளை(ஆக.,13) முடிவடைய இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நேற்றுடன் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் தலைமையில் டில்லியில் பேரணி நடத்தினர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: தங்களின் பிரச்னைகள் பார்லிமென்டில் எழுப்பப்படுவதை பார்க்க மக்கள் காத்திருந்தார்கள். ஆனால், குழப்பம் விளைவிப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருந்தது. மக்களை பற்றியும், வரி கட்டுவோரின் நலனை பற்றியும் கவலைப்படவில்லை. பார்லிமென்டில் நடந்தது கண்டனத்திற்குரியது. முதலைக்கண்ணீர் வடிப்பதை விட்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *