Share on Social Media


ஜெருசலம்: இஸ்ரேல் நாட்டின் மூத்த அரசியல்வாதியான ஐசக் ஹெர்சாக், புதிய அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இஸ்ரேலில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த  இரண்டு  ஆண்டுகளில் 4 முறை தேர்தல் நடத்தப்பட்டது.  நான்கு முறையும் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணியும் பெரும்பான்மையை பெறவில்லை. இதனால், நெதன்யாகு ஆட்சியை இழக்கிறார். மேலும், எதிர்கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக வழங்கப்பட்ட  காலக்கெடு நேற்று இரவுடன்  முடிந்தது.  முன்னதாக, நேற்று முன்தினம் 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில்  எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

இதன்மூலம், எதிர்க்கட்சிகளின் கூட்டணி கை ஓங்கி வருகிறது. இந்த கூட்டணியின் சார்பில், இஸ்ரேலின் லேபர் கட்சியின் தலைவர், எதிர்–்ககட்சி தலைவரான ஐசக் ஹெர்சாக் (60) புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இவர் 2013ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்  நெதன்யாகுவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அடுத்த மாதம் அதிபராக இருக்கும் ரியூவெல் ரிவ்லின் பதவிக்காலம் முடிகிறது. இதனை தொடர்ந்து, புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *