Share on Social Media


கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த முதல் பெண் பைலட் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் கேரள மாநிலம் கோவளம் கொச்சுத்துறையைச் சேர்ந்த ஜெனி ஜெரோம். 23 வயதான ஜெனி ஜெரோம், வயது குறைந்த விமானி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்து தற்போது முதன்முதலாக விமானத்தையும் இயக்கியுள்ளார் ஜெனி ஜெரோம்.

கடந்த சனிக்கிழமை இரவு 10.25 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்த ஏர் அரேபியா விமானத்தில் இணை பைலட்டாக செயல்பட்டார் ஜெனி ஜெரோம். அரபிக்கடலின் மேல் விமானத்தில் பறந்து தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறார். விமானியாகியிருக்கும் மீனவ கிராமத்துப் பெண் ஜெனி ஜெரோமை கேரளமே கொண்டாடி வருகிறது. கேரளத்தின் வயது குறைந்த பெண் பைலட் என்ற பெருமையும் ஜெனி ஜெரோமுக்குக் கிடைத்திருக்கிறது.

ஜெனி ஜெறோம்

ஜெனி ஜெறோம்

இதுகுறித்து ஜெனி ஜெரோம் கூறுகையில், “நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பிளஸ்-2 முடித்தபிறகு பெற்றோரிடமும், உறவினர்களுடமும் எனது ஆசையைச் சொன்னேன். `பெண் பிள்ளையான நீ எப்படி பிளேன் ஓட்ட முடியும்’ என்பது போன்ற வார்த்தைகள், என்னை சோர்வடையச் செய்யவில்லை. என் அப்பா எனது ஆசைக்கு பெரும் துணையாக நின்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *