Share on Social Media


பெங்களூரு, ஜூன் 8-”கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எடியூரப்பாவே முதல்வராக நீடிக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக, 65 எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்து சேகரிக்கப்பட்டுள்ளது,” என, முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:நான் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நாங்கள் அனைவரும், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளோம். அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என, 65 பா.ஜ., – எம்.எல்.ஏ.,களிடமிருந்து கையெழுத்து சேகரிக்கப்பட்டுள்ளது.கையெழுத்திடப்பட்ட கடிதம், கொரோனா முடிந்த பின், பா.ஜ., மேலிடத்துக்கு அனுப்புவோம். யாரோ சிலர் தலைமை மாற்றத்துக்கு முயற்சிக்கக்கூடும். அவர்களின் சதித்திட்டத்துக்கு, கடிவாளம் போட வேண்டும்.ஒன்றரை ஆண்டாக, பசனகவுடா பாட்டீல் எத்னால், முதல்வருக்கு எதிராக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.யோகேஸ்வர் தேர்தலில் தோற்றவர். அமைச்சர் பதவிக்காக, முதல்வரிடம் மன்றாடினார். அமைச்சரான பின், தற்போது அவருக்கு எதிராகவே பேசுகிறார்.சிலருக்கு கட்சியை, அவரவர் தொகுதிகளில் வெற்றி பெற வைக்கும் சக்தியில்லை. இப்படிப்பட்டவர்கள் அமைச்சராகி, முதல்வருக்கு எதிராகவே சதி செய்கின்றனர்.அனைத்து விஷயங்களையும் கடிதத்தில் விவரித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *