Share on Social Media


காட்டுப்பள்ளியில் உள்ள அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டம் நிறுத்தப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருக்கு பழவேற்காட்டின் பாரம்பரிய கடல் உணவு விருந்து ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் அதில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எங்களது வாழ்க்கைச் சூழலை நேரடியாக பார்வையிட வேண்டும் என்றும் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

Also Read: குழந்தைகளுக்கும் சிறுநீரகத்தில் கல், மக்களுக்கு உடல்நல பாதிப்புகள்; ஆபத்தில் எண்ணூர் மக்கள்!

சென்னை, பழவேற்காட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம். இதனை 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்துவரும் வேளையில், இந்த விரிவாக்கம் நிகழ்ந்தால் 82 கிராமங்கள், பத்து லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்களும், சூழலியல் ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் இந்த திட்டத்தை எதிர்த்தது. சட்டமன்றத் தேர்தலின்போது, `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் துறைமுக விரிவாக்கத் திட்டம் ரத்து செய்யப்படும்’ என்றும் வாக்குறுதி அளித்திருந்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்து 100 நாள்களைக் கடந்தநிலையில், தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அண்மையில் சட்டமன்ற கூட்டத்தில் உறுதியளித்தார் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் பழவேற்காட்டைச் சேர்ந்த பெண்கள் பாரம்பரிய கடல் உணவு விருந்துக்கு முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சார்பாக கூனங்குப்பத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி, பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த வீரம்மாள், கோரைக்குப்பத்தைச் சேர்ந்த செல்வி, கூனங்குப்பத்தைச் சேர்ந்த விஜயா உள்ளிட்ட பெண்கள் நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “பழவேற்காடு எவ்வளவு முக்கியமான இடம்னு உங்க எல்லோருக்கும் தெரியும். அங்கே நிறைய கடல்வாழ் உயிரினங்கள் இருக்கு. ஏராளமான மீன், நண்டு, இறால் வகைகள் இருக்கு. எண்ணூர்ல இருந்து சூலூர்ப்பேட்டை வரைக்கும் ஒரு லட்சம் பேர், ஆற்றுப் பக்கம் உள்ள 50,000 பேர் என சுமார் ஒன்றரை லட்சம் பேரோட வாழ்வாதாரம் இந்த மீன்வளத்தை நம்பிதான் இருக்கு.

35d9a6e4 4dbb 491c 9ca9 52123ebe6b6c Tamil News Spot
முதல்வரை விருந்துக்கு அழைக்கும் பழவேற்காடு பெண்கள்

Also Read: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: அதானிக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்புலம் என்ன?

அதானி துறைமுக விரிவாக்கம் நடந்தா… அங்கு மீன் வளம் சுத்தமா அழிஞ்சு போயிரும். கடல் சூழலும் மாசடைஞ்சு போயிரும். இந்த திட்டம் வரப் போகுதுன்னு எப்போ எங்களுக்கு தெரிஞ்சதோ அப்போதிலிருந்தே எங்க தூக்கம் போயிருச்சு. தலைக்குமேல கத்தி தொங்குறதுபோல ஒவ்வொரு நாளும் பயந்துகிட்டே இருந்தோம். இந்த நிலையிலதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த திட்டத்தை எதிர்த்து எங்களுக்கு ஆதரவா பேசினாங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்தா இந்த திட்டத்தை நிறுத்திருவோம்னு வாக்குறுதியும் கொடுத்தாங்க. எங்க ஏரியா மக்கள் எல்லோரும் தி.மு.க-வுக்குத்தான் ஓட்டுப்போடணும்னு முடிவெடுத்து தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டோம். எங்க ஆசைப்படியே தி.மு.க ஆட்சிக்கு வந்திருச்சு.

தேர்தலுக்கு முன்னாடி சொன்னது எதையும் முதலமைச்சர் ஸ்டாலின் மறக்கல. எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்னு சட்டமன்றத்துல உறுதியளிச்சிருக்கார். மக்கள் மேல அக்கறையோடு செயல்படுற அவரு எங்க வாழ்வாதாரத்துக்கு எதிரா இருக்க இந்த அதானி துறைமுக திட்டத்தை நிச்சயமா தடை செஞ்சிருவாருனு நாங்க நம்புறோம். அதுக்காக அவருக்கு ஒரு விருந்து வைத்து நன்றி சொல்ணும்னு நினைக்கிறோம். ஐ.நா உலக உணவு தினமான அக்டோபர் 16-ம் தேதி, பழவேற்காடு பகுதியில பாரம்பரிய கடல் உணவு விருந்து அவருக்காக ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருக்கோம். இந்த விருந்துக்கு முதலமைச்சரை எங்க சொந்த சகோதரரா நினைச்சு கூப்பிடுறோம். எங்க விருந்துல கலந்துகிட்டு, நாங்க வாழ்கிற சூழலையும் அவர் பார்க்கணும்” என்றனர்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *