Share on Social Media


`அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி’ என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்னல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கின்றன. அடாது மழை பெய்தாலும், விடாது தடுப்பூசி போடப்படும் என்கிற அளவுக்குத் தமிழக சுகாதாரத்துறை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தகட்டமாக, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் என்று ஊருக்கு ஊர் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குமுறல்களுக்குச் செவிமடுக்கத்தான் ஆளில்லை!

கொரோனாவுக்கான அரசாங்க செலவுகளை `காந்தி கணக்கு’, `நேரு கணக்கு’ கதையாகக் கையாண்டு, பல நூறு கோடிகளை சுருட்டியிருக்கிறார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இன்றைய ஆட்சியிலும் அந்தச் சுருட்டல் நின்றபாடில்லை. அதேசமயம், களத்தில் முன்னின்று கொரோனாவுக்கு எதிராக வாள் வீசிக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களின் சம்பளப் பணத்திலும், கொரோனாவைக் காரணம் காட்டி கைவைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

Govt Primary health centre (Representational Image)

Govt Primary health centre (Representational Image)
Photo: Vikatan

ஏற்கெனவே பற்பல காரணங்களுக்காக மாதம்தோறும் தங்களின் சம்பளப் பணத்தை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இழந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளிடமிருந்து புதிதாக வந்திருக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்று, அவர்களை ஆடிப்போகச் செய்திருக்கிறது.

`ஆரம்ப சுகாதார நிலையங்களைப் புனரமைக்கும் வேலையை, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவரே மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவை அவர்கள் செய்ய வேண்டும். அந்தத் தொகை, பிறகு அவர்களுக்கு வழங்கப்படும்‘ என்பதுதான் அந்த உத்தரவு.

இதுகுறித்து பேசிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், “கொரோனா ஆரம்பித்த நாள் முதலாகவே பல வகைகளிலும் எங்கள் கையிலிருந்துதான் பணத்தைச் செலவழிக்கிறோம். பிறகு தருகிறோம் என்று அரசுத் தரப்பில் சொல்கிறார்களே தவிர, இரண்டு ஆண்டுகளாக ஒரு ரூபாயைக்கூடத் தரவில்லை.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதற்கான பிரசாரம், சேர், டேபிள், மைக் செட், உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்தான் செலவழிக்கிறார்கள். மாதம்தோறும் ஒவ்வொரு மருத்துவரும் 3,000 ரூபாய்வரை இப்படிச் செலவழிக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *