Share on Social Media


திண்டுக்கல்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் போராட்டம் செய்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி மாலை அணிவித்தனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்போது அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும், கைகளில் பதாதைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். 

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகளை குறைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், சாலையில் இருசக்கர வாகனத்தை கிடத்தி மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர். கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களை ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வஞ்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார். 

குமரி மாவட்டம் திட்டுவிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அனைவரும் சமூக இடைவெளி விட்டு நின்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். புதுச்சேரியில் கடந்த 40 நாட்களில் 21 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவை மாட்டு வண்டியில் ஏற்றி நூதன முறையில் அவர்கள் போராடினர். 



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *