Share on Social Media

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று பார்த்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள்தான் மிக அதிகமான அளவில் வேலைவாய்ப்பைத் தருவதாக உள்ளன.

ஆனால், கொரோனா முதல் அலையினாலும் இரண்டாம் அலையினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவை இந்த நிறுவனங்கள்தான். நீண்ட காலமாக தொடர்ந்த ஊரடங்கு உத்தரவினால், சிறு தொழில் செய்யும் பல நிறுவனங்கள் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து இருக்கின்றன. என்ன செய்தால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பித்து வரமுடியும் என்றும் யோசித்து வருகின்றன.

சிறுதொழில் - Representational Image

சிறுதொழில் – Representational Image

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் புதுமையாக யோசித்தால், எப்படிப்பட்ட பாதிப்பாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்பதை எடுத்துச் சொல்ல ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது நாணயம் விகடன். ஒவ்வொரு ஆண்டு ஜூன் 27-ம் தேதி அன்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் முகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *