Share on Social Media


‘கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது ஊடகங்களின் கற்பனை,” என, ஹாசன் பா.ஜ., – எம்.எல்.ஏ., பிரிதம் கவுடா தெரிவித்தார்.

ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:வானத்தில் சூரியன், சந்திரன் எவ்வளவு உண்மையோ, அதே அளவு எடியூரப்பா ஆட்சி காலம் முடியும் வரை முதல்வராக நீட்டிப்பதும் சத்தியம். தேவையென்றால் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். முதல்வர் மாற்றம் என்பது ஊடகங்களின் கற்பனை.ஊடகங்களுக்கு யார் தகவல் கொடுக்கின்றனர் என்பது தெரியவில்லை. அடுத்த சட்டசபை, லோக்சபா தேர்தலும் எடியூரப்பா தலைமையில் தான் நடக்கும். கொரோனா தீவிரமடையும் நிலையில் முதல்வரை மாற்றினால் மக்கள் கொதித்தெழுவர். 20 எம்.எல்.ஏ.,க்கள், டில்லி சென்றதாக கூறுவது பொய். 20 பேர் அல்ல, 40 பேர் டில்லிக்கு சென்றாலும் மாநிலத்தில் தலைமை மாற்றம் ஏற்படாது.

ம.ஜ.த., மற்றும் காங்கிரசார் முதல்வர் மாற்றம் குறித்து கனவிலும் நினைக்கக்கூடாது. நாங்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *