Share on Social Media


புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 4வது இடத்தையே பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ., 312 இடங்களில் வென்று சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், 2022ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெறப்போகும் இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் போல்ஸ்ட்ரட் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. நவ.,6 முதல் நவ.,10 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வே ஆட்சியை தொடர பெரும்பாலான மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ., 239 முதல் 245 இடங்களில் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 தேர்தலில் பா.ஜ., 312 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் கடந்தமுறை 47 இடங்களில் வென்றிருந்த சமாஜ்வாதி கட்சி இம்முறை 119 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 32 இடங்களும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களிலும் வெற்றிப்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்புகளின் படி, பா.ஜ., ஆட்சியை தக்கவைக்கும் எனில், உ.பி.,யில் தொடர்ச்சியாக 2 முறை முதல்வராக பொறுப்பேற்ற முதல் முதல்வர் என்னும் சிறப்பை பெறுவார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *