Share on Social Media


லக்னோ:உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, ‘சமாஜ்வாதி சென்ட்’ என்ற நறுமண திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி சமாஜ்வாதி கட்சி கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தை துவக்கியது. இந்நிலையில் சமாஜ்வாதி எம்.எல்.சி., பம்மி ஜெயின், ‘சமாஜ்வாதி சென்ட்’ என்ற நறுமண திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து பம்மி ஜெயின் பேசியதாவது:இந்த சமாஜ்வாதி சென்ட்டில், 22 வகை நறுமணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் உள்ள இந்த சென்ட், சோஷலிசத்தை குறிக்கிறது. மக்கள் இந்த சென்ட்டை பயன்படுத்தும் போது, சோஷலிச சிந்தாந்தத்தை உணருவர். மாநிலத்தில் காணப்படும் வெறுப்புணர்வுக்கு, இந்த சென்ட் அடுத்த ஆண்டு முடிவு கட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் படம், கட்சியின் சைக்கிள் சின்னம் மற்றும் வண்ணங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சென்ட் பெட்டியின் பின்புறம், பம்மி ஜெயின் மொபைல்போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தலையொட்டி, இப்போதே இந்த சென்ட்டை வீடு வீடாக இலவசமாக வழங்க சமாஜ்வாதி திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *