Share on Social Media


லக்னோ : ” உ.பி., போலீசாரை நம்ப மாட்டேன்”, எனக்கூறிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.

உ.பி., தலைநகர் லக்னோவின் புறநகரில் உள்ள கக்கோரி என்ற பகுதியில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மசீருத்தின் மற்றும் மின் ஹஜ் ைது செய்யப்பட்டது தொடர்பாக கருதது தெரிவித்த சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், நான் உ.பி., போலீசாரை நம்ப மாட்டேன். குறிப்பாக பா.ஜ., அரசு மீது எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்றார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அகிலேஷின் கருத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக பாஜ.,வை சேர்ந்த சிடி ரவி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் முதல்வர் அகிலேஷ், தனக்கு உ.பி., போலீஸ் மற்றும் பா.ஜ., அரசு மீது நம்பிக்கை இல்லை எனக்கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இதே வாரிசு அரசியல்வாதி தான், பா.ஜ., தடுப்பூசயை நம்ப மாட்டேன் எனக்கூறினார். வேறு யாரை நம்புவார்? பாகிஸ்தான் அரசையா? அல்லது அதன் பயங்கரவாதிகளையா? எனக்கூறியுள்ளார்,

பா.ஜ.,வின் அமித் மால்வியா கூறுகையில், அகிலேஷ் முதலில் தடுப்பூசி மீது சந்தேகம் தெரிவித்தார். தற்போது, பயங்கரவாதிகளுக்கு எதிரான உ.பி., போலீசாரின் நடவடிக்கையை நம்ப முடியாது என்கிறார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களை நம்பாதவர் ஏன் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார்? என கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, இது தொடர்பாக சமாஜ்வாதி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அகிலேஷ் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, கைது குறித்து தெரியாத போது அவர் தெரிவித்த கருத்தை, எடிட் செய்து பகிரப்படுவதாக தெரிவித்து உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *