Share on Social Media


லக்னோ: உ.பி., தேர்தலுக்குப் பின்னர் ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்களை மீண்டும் கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டு தொடர் போராட்டம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய மோடி அரசு சீக்கிய மதத் தலைவர் ஸ்ரீ குரு நானக் தேவ் பிறந்தநாள் அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்களை ரத்து செய்திருந்தது.
இதனை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உபி.,யின் மிகப்பெரிய மாநில கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்து மோடி அரசை விமர்சித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் நோக்கத்திற்காக மோடி அரசு சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்களை ரத்து செய்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

latest tamil news

மேலும் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் இந்த மசோதாக்களை மத்திய மோடி அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அவர் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் விவசாயிகளின் நலனை காட்டிலும் வாக்காளர்களே மத்திய பாஜ.,வுக்கு முக்கியமானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *