Share on Social Media


லக்னோ: உ.பி., அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக ஏழு பேர் அமைச்சர்களாயினர். கட்சிதாவியவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில் யோகி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது. இம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் வகையில் கூட்டணியை பலப்படுத்துவது, கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

latest tamil news

இதனிடையே பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் ஒரு பெண் உள்ளிட்ட ஏழு பேர் வரை புதிதாக அமைச்சர்களாகி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜிதின் பிரசாதா என்பவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *