Share on Social Media


இன்னொருபுறம், திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், முறைகேடுகள் மற்றும் வன்முறை ஆகியவற்றின் மூலமாகவே பா.ஜ.க வெற்றிபெற்றிருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றம்சாட்டியிருக்கின்றன.

திரிபுரா இடது முன்னணியின் அமைப்பாளர் நாராயன் கர், தேர்தல் முடிவுகள் தொடர்பாக கூறுகையில், “திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒரு கேலிக்கூத்து. நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை காவல்துறையும மாநில தேர்தல் ஆணையமும் உறுதிசெய்யவில்லை. பா.ஜ.க-வின் ஆட்சியில் ஜனநாயகம், தேர்தல் நடைமுறை, மக்களின் வாக்குரிமை ஆகியவற்றின் மீதான தொடர் தாக்குதல்களிலிருந்து திரிபுராவைப் பாதுகாப்பதற்கு வரக்கூடிய நாள்களில் நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அகர்தலா மாநகராட்சி உட்பட ஐந்து உள்ளாட்சி அமைப்புகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மறுதேர்தல் நடத்தவில்லையென்றால் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிப்போம் என்று இடதுமுன்னணி கூறியது. ஆனால், மறுதேர்தல் நடத்தப்படவில்லை.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தைத் தாண்டி பல மாநிலங்களில் கால்பதிக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்துவருகிறார். அந்த வகையில், திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், ஆளும் கட்சியான பா.ஜ.க-வே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், “திரிபுராவில் ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது. எங்கள் கட்சி மிகப்பெரிய எதிர்க் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. வாக்குச்சாவடிகள் சூறையாடல், வன்முறைகள், எதிர்க் கட்சியினர் மீது தாக்குதல் என பா.ஜ.க வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு மத்தியில், சுமார் 20 சதவிகித வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளர் குணால் கோஷ், “நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால், பா.ஜ.க-வால் வெற்றிபெற்றிருக்க முடியாது. எங்களுடைய அடுத்த பணியைத் தொடங்கிவிட்டோம். 2023-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்” என்று கூறியிருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *