Share on Social Media


திருப்பூர்:’உள்நாட்டு ஆடை உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தொழில் துறை அமைச்சருக்கு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) கடிதம் அனுப்பியுள்ளது. ஊரடங்கால், கடந்த மே மாதம் முதல், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அரசு அளித்த தளர்வுகளை அடுத்து, கடந்த 7 ம் தேதி முதல், ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் ‘ ஜாப்ஒர்க்’ நிறுவனங்கள் மட்டும் இயங்கிவருகின்றன.உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயங்குவது குறித்து, அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
வெளிமாநில மற்றும் உள்ளூர் ஆர்டர்கள் கைநழுவுகிறது; நிதி நெருக்கடியால், ஆடை உற்பத்தி துறையினரும்; வேலை இழப்பால் தொழிலாளரும் தவிக்கின்றனர்.ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நிறுவனங்களும் இயங்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி, அழுத்தம் கொடுத்து வருகிறது.
‘சைமா’ தலைவர் ஈஸ்வரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கடந்த 45 நாட்களாக, திருப்பூரில், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தொழில் துறையினருக்கு, நிதி நெருக்கடி, வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. வேலை இழப்பால், தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர்.
உள்நாட்டு ஆடை நிறுவனங்கள் மீண்டும் இயங்க அறிவிப்பு வெளியிடக்கோரி, முதல்வருக்கு, கடந்த 9,18ம் தேதிகளில் கடிதம் அனுப்பினோம். ஆனால், ஊரடங்கு தளர்வு அறிவிப்பில், எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படாதது கவலை அளிக்கிறது. பின்னலாடை தொழில் துறையின் எதிர்காலம், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர் நலன் கருதி, உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 50 சதவீத தொழிலாளருடன் இயங்க விரைந்து அனுமதி வழங்கவேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *