Share on Social Media


புதுச்சேரி : புதுச்சேரி அரிச்சுவடி மனநல மையம், அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரெஞ்சு சிட்டி சார்பில், உலக மனநல மாத விழிப்புணர்வு விழா நடந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த விழாவிற்கு, அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் குத்துவிளக்கேற்றி, துவக்கிவைத்தார்.விழாவையொட்டி நடந்த ஓவியப்போட்டி, யோகா போட்டியை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.ஜான்குமார் எம்.எல்.ஏ., சதுரங்க போட்டியை துவக்கி வைத்து, பரிசு வழங்கினார்.

கேரம் போட்டியை சென்னை ஜி.டி., போஸ் பிசியாட்ரி மருத்துவமனை இயக்குனர் அஜித்போஸ் துவக்கிவைத்து பரிசு வழங்கினார்.டாக்டர் அன்புதுரை துளசி செடியையும், மணிமாறன் ரோஜா செடி மற்றும் பரிசுகளை வழங்கினர்.கல்லுாரி அளவில் நடந்த கட்டுரை போட்டியில் முதல் பரிசாக அரிச்சுவடி மனநல மைய சேர்மன் ராஜகோபாலன் உருவம் பொறித்த தங்க நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.சபாநாயகர் மற்றும் அமைச்சருக்கு நினைவு பரிசினை மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் வழங்கினார். அரிச்சுவடி ஊழியர்களின் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஸ்வஸ்திக் டிரஸ்ட் டாக்டர் சக்திவண்ணன் நன்றி கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *