Share on Social Media

சென்னை: உலக கோப்பை செஸ் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகினார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில், உலக கோப்பை செஸ் தொடர் (ஜூலை 10 – ஆக. 3) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க இந்தியா சார்பில் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா, அரவிந்த், இனியன், கொனேரு ஹம்பி, ஹரிகா, பக்தி குல்கர்னி, வைஷாலி, பத்மினி ராத் தகுதி பெற்றனர்.

இந்நிலையில் இத்தொடரில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை ஹம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹம்பி கூறுகையில், ‘‘உலக கோப்பை தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்டோர் கூடுவர் என்பதால் தற்போதுள்ள சூழ்நிலையில் இது சரியாக தெரியவில்லை. முன்னதாக இத்தொடரில் வெற்றி பெறுபவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்.

ஆனால் தற்போது ‘கேன்டிடேட்ஸ்’ தொடருக்கு மட்டுமே தகுதி பெறுவார். ஏற்கனவே இத்தொடருக்கு தகுதி பெற்றிருப்பதால் உலக கோப்பையில் இருந்து விலகினேன்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *