Share on Social Media

சென்னை: உலக கோப்பை செஸ் தொடருக்கு இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி தகுதி பெற்றார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில், உலக கோப்பை செஸ் தொடர் (ஜூலை 10 – ஆக. 3) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க இந்திய கிராண்ட் மாஸ்டர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி 26, ‘ரேட்டிங்’ அடிப்படையில் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் இவர், மூன்றாவது முறையாக (2017, 2019) உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார். தற்போது இவர், உலக தரவரிசையில் 23வது இடத்தில் உள்ளார்.

தவிர விதித், உலக கோப்பைக்கு தகுதி பெற்ற 4வது இந்திய வீரரானார். ஏற்கனவே ஹரிகிருஷ்ணா, அரவிந்த், இனியன் தகுதி பெற்றிருந்தனர். இதேபோல இந்திய வீராங்கனைகளான கொனேரு ஹம்பி, ஹரிகா, பக்தி குல்கர்னி, வைஷாலி, பத்மினி ராத், உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து விதித் கூறுகையில், ‘‘உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது மகிழ்ச்சி. உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடரில் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமையானது. இதில் சிறப்பாக விளையாடுவேன்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *