Share on Social Media

சோச்சி: உலக கோப்பை செஸ் தொடரின் 3வது சுற்றுக்கு தமிழகத்தின் பிரக்ஞானந்தா முன்னேறினார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில், 9வது உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதில் 206 பேர் பங்கேற்கின்றனர். இதன் முதல் சுற்றில் பிலிப்பைன்சின் பாலோ பெர்சமினாவை வீழ்த்திய இந்திய கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 2வது சுற்றில் ஆர்மேனியாவின் கேப்ரியல் சர்கிசியனை சந்தித்தார்.

இதன் முதல் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 42வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். தொடர்ந்து அசத்திய இவர், 2வது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இதில், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் போலந்தின் மைக்கேல் கிராசென்கோவை எதிர்கொள்கிறார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *