Share on Social Media

புதுடில்லி: உலக கோப்பை செஸ் தொடருக்கு தமிழக வீரர் இனியன் தகுதி பெற்றார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில், உலக கோப்பை செஸ் தொடர் (ஜூலை 10 – ஆக. 3) நடக்கவுள்ளது. இதற்கான இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்ற தகுதிச் சுற்று ‘ஆன்லைன்’ மூலம் நடந்தது. இதில் அதிபன், சேதுராமன், சவுமியா, இனியன், குகேஷ் உள்ளிட்ட 17 பேர் விளையாடினர்.

நேற்றைய கடைசி நாளில் நடந்த 15வது சுற்றில் ரித்விக் ராஜாவை வீழ்த்திய தமிழக வீரர் இனியன், 16வது சுற்றில் சரவண கிருஷ்ணாவை தோற்கடித்தார். ஆனால் இவர், கடைசி சுற்றில் தீப் செங்குப்தாவிடம் தோல்வியடைந்தார்.

நாராயணனுக்கு எதிரான 15வது சுற்றை ‘டிரா’ செய்த குகேஷ், அடுத்த இரு சுற்றுகளில் சவுமியா, விஷ்ணு பிரசன்னாவை தோற்கடித்தார்.

மொத்தம் 17 சுற்றுகளின் முடிவில் இனியன், குகேஷ் தலா 12.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க இவர்கள் இருவரும் மோதிய போட்டியின் முடிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி 14வது சுற்றில் இனியன், குகேஷை வீழ்த்தியிருந்தார். இதனால் இனியன் முதலிடம் பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *