Share on Social Media


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.56 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.56 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,56,01,409 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,91,36,424 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37,88,153 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,26,76,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 84,791 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *