Share on Social Media


கோவிட்-19 சூழலைக் கையாள்வது பற்றி குழுவிலிருக்கும் வல்லுநர்களிடமும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்து, அதைத் தற்போதைய சுகாதாரத்துறை செயலரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு அரசுக்குப் பரிந்துரைகளை அளிப்போம். அரசுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையிலான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிந்துரைகள் அளிக்கப்படும்.

People queue up for COVID-19 vaccine

People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல் மட்டுமன்றி அடுத்தடுத்து கோவிட்-19 அலைகள் வந்தால் அதைக் கையாளும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்று பெருந்தொற்றுகள் வரும் பட்சத்தில் அதைக் கையாளும் வகையிலும் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் பரிந்துரைகளைத் தயார் செய்து அளிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

கோவிட்டை கையாள்வதில் இந்தியாவுக்கு மாடலாக கேரளா உள்ளது. ஆனால், கேரளாவைவிட சிறப்பாகச் செயலாற்றும் திறனும் கட்டமைப்பும் தமிழகத்துக்கு உள்ளது. இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவிலும் ஒரு மாதிரியாகத் தமிழகம் செயல்படும் மாடலை உருவாக்க வேண்டும். அவ்வப்போது இந்தக் குழு இணைந்து ஆலோசனைகளில் ஈடுபடும். வரும் வாரத்தில் முதல் மீட்டிங் நடைபெறும்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *