Share on Social Media


அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு, வெள்ளை மாளிகை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், சில நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனையடுத்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

“உலகளவில் கொரோனாவால் அமெரிக்காவில்தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் அனைவரும், நாம் இழந்த அந்த உயிர்களை நினைவுகூர வேண்டும். முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகிய மூன்று போர்களில் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, கடந்த ஒரு வருடத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்” என்று வருத்தத்துடன் அதிபர் ஜோ பைடன் மக்களிடம் உரையாற்றினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *