ஒரு ரகசியம் தெரியுமா? நல்ல உடலுறவுக்கு நல்ல தகவல்தொடர்பு அவசியம். நீங்களும் இணையும் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் எவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு இன்பமும் பன்மடங்காகும். ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? பெரும்பாலான பெண்கள் தங்கள் இணையிடம் தாம்பத்யம் பற்றி வாயே திறப்பதில்லை. செக்ஸ் என்பதே தீண்டத்தகாத ஒரு வார்த்தையாக நம் சமூகத்தில் பதிவாகியிருப்பதுதான் காரணம். அதனால், பெண்கள் தாங்கள் விரும்புவதை விவரிக்கும் வார்த்தைகள் இதுவரை இல்லை. அது மட்டுமல்ல… பிற நுட்பங்களைப் பரிந்துரைக்க போதுமான அனுபவமும் இல்லை.

ஒருவேளை தோழிகள் மூலமாகவோ, புத்தகங்கள், இணையம், வீடியோக்கள் வாயிலாகவோ அறிந்துகொண்டாலும்கூட, `உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’ என்கிற கேள்வி எதிர்த்தரப்பில் பிறக்கும். அப்புறம் எப்படிப் பேசுவார்கள் பெண்கள்? இருதரப்பிலும் தயக்கமற்ற உரையாடல் நிகழ்ந்தால், அதுவே பாலியல் நெருக்கத்துக்கு வழிவகுத்து பிரமாதப்படுத்திவிடும். இதை ஆண்கள் உணர்ந்துகொண்டால் அடுத்தடுத்து அமர்க்களம்தான். ஆகவே, பெண்கள் தங்களுக்கு வேண்டியதை கேட்டுப் பெற வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும்.
சரி… சமூகச் சிக்கல்களைக் கடந்து சமாசாரத்துக்கு வருவோம். செக்ஸ் தனக்குள் ஏராளமான சாகசங்களையும் ஆச்சர்யங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது. உதாரணமாக ஒரு விஷயம் பாருங்கள். யோனி ஊடுருவல்தான் இங்கு அதிக அளவில் இயந்திரம்போல நடக்கிற விஷயம். புதிதாக வேறொன்றும் வேண்டாம்.