Share on Social Media


பெங்களூரு : ‘விவசாயிகளுக்கு தேவையான உரம் பற்றாக்குறையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு, அமைச்சர் முதலில் தீர்வு காண வேண்டும்’ என காங்கிரஸ் கூறியுள்ளது.

‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் காங்கிரஸ், நேற்று பதிவிட்டதாவது:இத்தனை நாட்களாக, யூரியா, டி.ஏ.பி., உரம் பற்றாக்குறை என, விவசாயிகளை பா.ஜ., அரசு, நெருக்கடியில் தள்ளுகிறது. விவசாயிகளை கோழைகள் என, அமைச்சர் பி.சி.பாட்டீல் விமர்சித்தார்.விவசாயிகளின் உரப்பிரச்னைக்கு, தீர்வு காண முடியாமல் அமைச்சர் உள்ளார். விவசாயத்துறை அமைச்சராக, கொள்ளையடிப்பதை தவிர, வேறெதையும் அவர் செய்யவில்லை.

முதல்வர் பசவராஜ் பொம்மை, அவ்வப்போது டில்லி செல்வதிலேயே, அரசில் எதுவும் சரியில்லை என்பதை உணர்த்துகிறது.இவர் சுற்றுப்பயணம் செல்வது, மாநிலத்தின் நலனுக்காக அல்ல; தன் சொந்த நலனுக்காக. டில்லியிலேயே அதிகமாக காலம் கழிக்கும் முதல்வர், மாநிலத்துக்கு ‘விருந்தினர் சி.எம்.,’ போன்றுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *