Share on Social Media

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,557க்கும் சவரன் ரூ.36,456 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20 உயர்ந்துள்ளதால் தங்கநகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,537 என்ற விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,557 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.36,296 என விற்பனையாகி வந்தது.

இன்று சவரன் ஒன்றுக்கு ரூபாய் 160 உயர்ந்ததை அடுத்து ஒரு சவரன் விலை ரூ.36,456 என விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4911 என்றும், ஒரு சவரன் விலை ரூ.39,288 என்றும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் இன்று வெள்ளி விலை 40 காசுகள் கிராமுக்கு குறைந்து உள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.40 எனவும் ஒரு கிலோ விலை ரூ.74,400 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *