Share on Social Media


மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரில்நேற்று மட்டும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் இன்னும் அபாயத்திலிருந்து நாம் மீளவில்லை. மதுரையில் நேற்று 14 பேர் பலியாகினர். 441 பேர் புதிய தொற்றுக்கு ஆளாகினர். 1569 பேர் குணமடைந்தனர். இதுவரை 67ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டு 55 ஆயிரத்து 513 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 974. 11 ஆயிரத்து 443பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 2862 ஆக்சிஜன் வார்டில் 1657 பேரும் 1422 சாதாரண வார்டில் 558 பேரும் 856 ஐ.சி.யு.வில் 722 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மொத்தமுள்ள 2003 படுக்கைகளில் 640 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.திண்டுக்கல்லில் நேற்று 284 பேர் பாதிக்கப்பட்டனர்.

393 பேர் குணமடைந்தனர். ஒருவர் பலி. மொத்தம் 28 ஆயிரத்து 842 பேர் பாதிக்கப்பட்டு 25 ஆயிரத்து 897 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 453. தற்போது 2492 பேர் சிகிச்சையில் உள்ளனர். 872 ஆக்சிஜன் படுக்கைகளில் 689 பேரும் 151 ஐ.சி.யு.,வில் 119 பேரும் 1265 சாதாரண வார்டில் 761 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.தேனியில் நேற்று 342 பேர் பாதிக்கப்பட்டனர். 951 பேர் குணமடைந்தனர்.11 பேர் இறந்தனர். 39 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டு 34 ஆயிரத்து 394 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 396. தற்போது 4234 பேர் சிகிச்சையில் உள்ளனர். 634 ஆக்சிஜன் வார்டில் 509 பேரும் 385 சாதாரண வார்டில் 148 பேரும் 66 ஐ.சி.யு.,வில் 59 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

ராமநாதபுரத்தில் 118 பேருக்கு புதிய பாதிப்பு. 211 பேர் குணமடைந்தனர்.6 பேர் பலி. மொத்தம் 17ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டு 14 ஆயிரத்து 840 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 277. தற்போது 2840 பேர் சிகிச்சையில் உள்ளனர். 576 ஆக்சிஜன் வார்டில் 247 பேரும் 911 சாதாரண வார்டில் 129 பேரும் 117 ஐ.சி.யு.,வில் 66 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.சிவகங்கையில் 125 பேருக்கு புதிய பாதிப்பு. 184 பேர் குணமடைந்தனர்.6 பேர் இறந்தனர். 15 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்து 452 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 175. தற்போது 1744 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1268 ஆக்சிஜன் வார்டில் 576 பேரும் 691 சாதாரண வார்டில் 355 பேரும் 178 ஐ.சி.யு. வார்டில் 152 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.விருதுநகரில் 420 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டது. 1070 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 4 பேர்இறந்தனர். 40 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டு 35 ஆயிரத்து 128 பேர் குணமடைந்தனர். 458 பேர் பலியாகினர். 4902 பேர் சிகிச்சையில் உள்ளனர். 569 ஆக்சிஜன் வார்டில் 426 பேரும் 521 சாதாரண வார்டில் 280 பேரும் 108 ஐ.சி.யு.,வில் 89 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா குறைந்தாலும் இறப்புகள் இருமடங்காக அதிகரித்து வருகிறது.

ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் மக்கள் கூட்டமாக நடமாடஆரம்பித்து விடுவர்.தனி மனித ஒழுக்கம் மட்டுமே கொரோனா தொற்றின் சங்கிலியை நிரந்தரமாக அறுக்கும் ஆயுதம். மார்க்கெட்டில் காய்கறி வாங்கினாலும் சமூக இடைவெளி அவசியம். கடைகளில் எந்தபொருளும் இலவசமாக தருவதில்லை. காசு கொடுத்து பொருட்கள் வாங்கும் போது ஏன் முண்டியடிக்க வேண்டும்.உயிரை எடுக்கும் கொரோனாவை ஏன் இலவசமாக வாங்க வேண்டும். குடும்பத்தில்ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவசிகிச்சை, மரணம், தனிமை என துயரப்படுபவர்களைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்வோம்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *