Share on Social Media

இன்று அக்டோபர் 8-ம் தேதி அன்று கூடும் ஆர்.பி.ஐ கூட்டத்தில், வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுமா என்கிற கேள்வியைப் பலரும் எழுப்பிவந்தனர். பணவீக்கம் தற்போது அதிகமாக இருக்கிறது. காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துவருவதால், விலைவாசி இன்னும்கூட உயரும் என்கிற எதிர்பார்ப்பும் பயமும் மத்தியத் தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் செலவு செய்வதை ஓரளவுக்குக் குறைக்க வேண்டும் எனில், வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற பலரிடம் நிலவியது.

Rupee

Also Read: உலக நிதித் திட்டமிடல் தினம்: நீங்கள் கட்டாயம் பின்பற்றவேண்டிய 10 நிதி நிர்வாக அம்சங்கள்!

ஆனால், முக்கியமான வட்டி விகிதங்களை உயர்த்தாமலே விட்டிருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. தற்போதுள்ளபடியே, ரெப்போ ரேட் வட்டி விகிதமானது 4% என்கிற அளவிலேயே இருக்கும் என்று சொல்லி இருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.

முக்கியமான வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் முடிக்கப்பட்ட எட்டாவது கூட்டம் இன்று நடந்த கூட்டம் ஆகும். முக்கியமான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என ரிசர்வ் வங்கியின் ஆறு இயக்குநர்களில் ஐந்து பேர் சொன்னதாகவும், ஒரே ஒருவர் மட்டும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யலாம் என்று சொன்னதாகவும் தெரிகிறது.

AP21271334420432 Tamil News Spot
Indian Economy (Representational Image)

Also Read: `சரியா முதலீடு பண்ணா ஜாக்பாட்தான்!’ – வேல்யூ இன்வெஸ்டிங் பத்தி தெரிஞ்சுப்போமா? – 29

கடந்த ஜூலை – செப்டம்பர் இடையிலான காலாண்டில் பணவீக்கம் என்பது எதிர்பார்த்த அளவைவிட குறைவாகவே இருந்ததாகவும், அதனால் வட்டி விகிதங்களில் மாற்றமும் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *