Share on Social Media


குவாலியர்:மத்திய பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தான் அணிந்திருந்த இரண்டு முக கவசங்களில் ஒன்றை கழற்றி, பா.ஜ., நிர்வாகிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியரில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார்.இந்த கூட்டத்திற்கு குவாலியர் தொகுதியின் முன்னாள் எம்.பி., அருண் மிஸ்ரா, முக கவசம் அணியாமல் வந்திருந்தார். இதை கவனித்த மத்திய அமைச்சர் சிந்தியா, தான் அணிந்திருந்த இரண்டு முக கவசங்களில், ஒன்றை கழற்றி அருண் மிஸ்ராவிடம் வழங்கினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ‘லட்சக்கணக்கில் செலவு செய்து ஆளும் அரசு, அரசியல் பேரணிகளை நடத்தி வரும் நிலையில், அதன் அமைச்சர்கள், தாங்கள் உபயோகித்த முக கவசங்களை மக்களுக்கு வினியோகித்து வருகின்றனர்’ என, காங்., விமர்சித்துள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *