Share on Social Media


ஹரித்துவார்: ‛‛டில்லி போல் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்,” என்று உத்தர்கண்ட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டில்லியில் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, அடுத்தாண்டு உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. இன்று (நவ.,21) ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகண்ட் சென்றுள்ளார்.

ஹரித்துவாரில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது: கடந்த 2020 சட்டசபை தேர்தலில், நான் மக்களுக்கான சேவை செய்யவில்லை என்றால், டில்லி மக்கள் எனக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்று கூறினேன். தேர்தலுக்கு முன் இதுபோன்று சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இல்லை. எங்களுக்கு அதுபோன்று வாய்ப்பு அளியுங்கள், அதன்பின் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்துவீர்கள் என்று இன்று உங்களிடம் கேட்கிறேன்.

நாங்கள் உத்தரகண்ட்டில் ஆட்சி அமைக்கும்போது, டில்லியை போன்று 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம் திட்டத்தை தொடங்கி வைப்போம். அயோத்தியாவில் இலவசமாக சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவோம். அதேபோல், இஸ்லாமியர்கள் அஜ்மீர் ஷெரீப் செல்வதற்கான வாய்ப்பையும், சீக்கியர்கள் கர்தார்பூர் சகிப் செல்லும் வாய்ப்பையும் ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *