Share on Social Media


இந்தியாவில் யானை – மனித எதிர்கொள்ளல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெரும்பாலும் மனிதர்களே காரணம் என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலைப் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்துள்ளது.

யானை

Also Read: கேரளா: தாய் யானையைத் தேடிய போராட்டம் தோல்வி… முகாமுக்கு மாற்றப்படும் குட்டி யானை!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள பழங்குடி இளைஞர்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுடன் சிலர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிககுள் செல்கின்றனர்.

இதையடுத்து, ஓர் குட்டி யானை உள்பட மூன்று யானைகள் வந்த ஓர் கூட்டத்தை அந்த இளைஞர்கள் துன்புறுத்தத் தொடங்கினர். நாய்கள் உதவியுடன் யானைகள துரத்துவது, யானைகள் மீது கற்களை வீசுவது, கம்பு உள்பட கையில் கிடைப்பதை வைத்து எல்லாம் யானைகளை தாக்குவது என்று யானைகளை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டேயிருக்கின்றனர்.

Screenshot 20210506 120501 Video Player Tamil News Spot
யானை

குட்டி யானையைப் பாதுகாப்பதற்காக அதை விட்டு நகரவும் முடியாமல், இளைஞர்களை விரட்டவும் முடியாமல் பெரிய யானை பரிதவிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன..

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வனவிலங்கு ஆர்வலர்களிடம் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. `காடுகளை பாதுகாக்கும் பழங்குடிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Screenshot 20210506 120632 Video Player Tamil News Spot
யானை மீது கல் வீசும் இளைஞர்கள்

இதைத்தொடர்ந்து, அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருப்பூர் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *