Share on Social Media


‘பாசமலர்’, ‘கிழக்குச் சீமையிலே’ என மினிமம் கியாரன்ட்டி ஒன்லைனை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். ஆனால், படம் எடுக்கப்பட்ட விதமும், திரைக்கதையும், வசனமும் படத்தின் ஒன்லைனுக்கு பலம் சேர்க்கவில்லை. ஒரு படத்தில் சமூக கருத்துகள் அவசியம்தான்; சினிமா என்னும் காட்சி வடிவத்தில் வசனங்களின் பங்கு என்பது நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், அதற்காக படத்தில் வரும் எல்லோரும் கருத்து குடோன்களாய் பேசிக்கொண்டேயிருப்பது அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது. சினிமா எனும் காட்சி ஊடகத்தில் வெறும் வசனங்களைக் கொண்டே நிரப்ப முயற்சிப்பது நியாமில்லையே ‘உடன்பிறப்பே’.

உடன்பிறப்பே

உடன்பிறப்பே

ஒரு காட்சிக்கும், மறு காட்சிக்குமான இடைவெளியில் சீரியல் நெடி அதிகம். அதிலும் தீபா “தாய் மாமன்னா யாரு தெரியுமா” என கிளாஸ் எடுக்க ஆரம்பிக்கும்போது, “பேசிட்டு இருங்கக்கா, நாங்க ஒரு டீ சாப்பிட்டு வர்றோம்” என்றே சொல்லத் தோன்றுகிறது. நகைச்சுவை கதாபாத்திரமான சூரியின் எமோஷனல் காட்சிகளிலும் ரைமிங் வசனம் எழுதி, அதையும் காமெடி ஆக்கியிருக்கிறார்கள். இன்ஜினியரிங் படிப்பைக் குறித்த நக்கல் எல்லாம் இருக்கட்டும்… கைநாட்டு, கையெழுத்து வைத்தே அடுத்தவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதெல்லாம் வாட்ஸ்அப்பில் மட்டுமே சாத்தியம். தமிழ் இயக்குநர்கள் சில காலத்துக்கு வாட்ஸ்அப்பை கொஞ்சம் அன்இன்ஸ்டால் செய்வது நல்லது!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *