Share on Social Media


அதேபோல, டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில், அனைத்து தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அப்போது, பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், “நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த நீதி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால், ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன” எனக் குறிப்பிட்டார்.

கே.கே.வேணுகோபால்

கே.கே.வேணுகோபால்

மேலும்,“நீதியை விரைவாக வழங்கும் வகையில் உச்ச நிதிமன்றத்தின் படி நிலைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இடையே மேல் முறையீடு செய்ய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. சிறிய அளவிலான கிரிமினல் வழக்குகள், குடும்ப வழக்குகளை எல்லாம் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்போக்கு குறைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நீதிமன்றத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.