Share on Social Media

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,566க்கும் சவரன் ரூ.36,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம். போகிற போக்கினைக் பார்த்தால் தங்கம் விலையானது மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டு விடுமோ? என்ற எண்ணம் எழும் அளவிற்கு அதன் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இந்த மாதத்தில் தங்கம் விலை ஓரளவுக்கு குறைவாகவே உள்ளது. ஒரு நாள் விலை உயர்ந்தாலும் அடுத்த நாளில் விலைச் சரிவு காணப்படுகிறது. காலையில் தங்கம் விலை உயர்த்தப்பட்டு, மாலை நேரத்தில் சற்று இறங்கி வருவது வாடிக்கையாளர்களை நிம்மதியடைய செய்துள்ளார். இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. தொடர்ந்து, தங்கத்தின் விலை தடுமாற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ.74.70க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.36,456 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,557க்கு விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *