Share on Social Media


காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் உயிர்த் தியாகம், 350க்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டம், நரேந்திர மோடி ஜீ… உங்கள் அமைச்சரின் மகன் விவசாயிகளை நசுக்கி கொன்றார். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கட்சியின் தலைவர்கள், விவசாயிகளை அவமானப்படுத்தினர். தீவிரவாதிகள், குண்டர்கள், தீங்கிழைப்பவர்கள் என்று அழைத்தனர். நீங்களோ அவர்களை அந்தோலன்ஜீவி (தொழில் முறை போராட்டக்காரர்கள்) என்று அழைத்தீர்கள்.

அவர்களை தடியால் அடித்தீர்கள், கைது செய்தீர்கள். இப்போது தேர்தல் தோல்வியை உணர்ந்த நீங்கள் இந்த நாட்டின் யதார்த்தத்தை திடீரென உணர ஆரம்பித்து வீட்டீர்கள். இந்த நாடு விவசாயிகளால் கட்டப்பட்டது. இது விவசாயிகளின் நாடு. அவர்கள் நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள். விவசாயிகளின் நலனை மிதித்து எந்த அரசாலும் இந்த நாட்டை நடத்த முடியாது. உங்கள் நோக்கத்தையும், அணுகுமுறையையும் நம்புவது கடினம்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *