Share on Social Media


ஆம்… திருமணமான சில ஆண்டுகளில் இருவருமே நல்ல எடைபோட்டு விடக்கூடும். தோற்றப்பொலிவு குறைந்திருக்கக்கூடும். பணம் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிப்பதற்காக நேரங்காலம் பார்க்காமல் ஓயாது உழைக்க வேண்டியிருக்கலாம். கொரோனாவில் தொடங்கி, குழந்தைகளின் பள்ளிக்கூட பிரச்னை, மருத்துவம், மோட்டார் ரிப்பேர், வீட்டில் தண்ணீர் இல்லை, வீட்டுக்கு வெளியே மழை வெள்ளம்… இப்படி அன்றாடப் பிரச்னைகளில் சிக்கி அல்லாடலாம். ஆனாலும், தம்பதிகளுக்கான பிணைப்பில் எந்தக் குறையும் இருப்பதில்லை, அதில் ரொமான்ஸ் இல்லையென்றாலும் கூட!

இடைக்காலத்தில் புதிய பறவையை நாடிச்செல்லும் விதிவிலக்குகளையும், அதீத பிரச்னைகளால் விவாகரத்துக்குத் தள்ளப்படும் அப்பாவிகளையும் பற்றி மனவியல் நிபுணர்களின் இந்த ஆய்வு கருத்தில் கொள்ளவில்லை. இப்போது விவாகரத்துகள் அதிகரித்திருந்தாலும்கூட, அந்தச் சதவிகிதம் மிகக் குறைவு என்பதே காரணம்.

ஒரே இணையுடன் வாழ்ந்ததால் போரடித்துவிட்டது என்று பொதுவாக எந்த இந்தியரும் சொல்வதில்லை. குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த பிறகு பரஸ்பர முத்தமோ, அணைப்போ, கைகளைப் பற்றிக்கொள்ளுதலோகூட இல்லாத தம்பதிகளே இங்கு ஏராளம். இப்படியான வெளித் தேவைகளையும் தாண்டி, அவர்களை மன ஒட்டுதலோடு வைத்திருக்கிறது பாசம் என்கிற அட்டாச்மென்ட்தான்.

Couple (Representational Image)

Couple (Representational Image)
Photo by Jasmine Carter from Pexels

ஆனால், எந்த வயதிலும், எந்தச் சூழலிலும், எந்தப் பின்னணியிலும் காதலும் ரொமான்ஸும் காமமும் மிக அவசியம் என்பதைத்தான் விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஒன்றுமே இல்லாவிட்டாலும்கூட பிணைந்து இருக்கிற நம் ஜோடிகளின் வாழ்வில், இவையெல்லாமும் சேரும்போது எப்படிப்பட்ட பரவசம் கிடைக்கும் என்று கண்மூடி சில நிமிடங்கள் யோசிக்கலாம். இணையின் கைப்பற்றிப் பேசத் தொடங்கலாம், இனியேனும்!

முதல் பாராவில் உள்ள கேள்விக்கான விடையும் இதே பிணைப்புதான்!

– சஹானா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *