Share on Social Media


நெஞ்சைக் கையில் பிடித்தபடியே நடத்துனர் கனகசபாபதியை அழைத்து விஷயத்தைச் சொன்ன செல்வராஜ், பயணிகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென பேருந்தை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு மயங்கி விழுந்திருக்கிறார். உடனே நடத்துனர் கனகசபாபதி மற்றும் பயணிகள் சிலர் கார் ஒன்றை வரவழைத்து செல்வராஜை, அருகிலுள்ள சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பால் தன்னுடைய உயிர் பிரியும் தருவாயிலும் பேருந்திலிருந்த 20 பயணிகளைக் காப்பாற்றிவிட்டு, ஓட்டுநர் செல்வராஜ் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பேருந்திலிருந்த நடத்துநர் கனகசபாபதியிடம் பேசினோம். “2 வருஷத்துக்கு முன்னாடி செல்வராஜூம் நானும் ஒன்னா ஒரே வண்டியில வேலை பார்த்திருக்கோம். அதுக்கப்புறம் நான் வேற ரூட்டுக்கு கண்டக்டரா போயிட்டேன். அதுக்குப் பின்னாடி அடிக்கடி சந்திச்சிக்கிட்டாலும், 2 வருஷத்துக்கு அப்புறமா நேத்து தான் அவர் கூட டியூட்டிக்கு போனேன். அப்படியிருக்க செல்வராஜூக்கு நடந்ததை இன்னும் என்னால நம்பமுடியலை. காலையில கூட முதல் ட்ரிப் எடுக்குறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிட்டுட்டோம். நல்லா தான் இருந்தாரு. எல்லார்கிட்டயும் கலகலப்பா பேசுவாரு. நல்ல மனுஷன். ‘நெஞ்சு ஒருமாதிரி வலிக்குது மாப்ள’ன்னு அவர் சொன்னது இன்னும் எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கு” என வருந்தினார். இறப்பிலும் மனிதத்தினை விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறீர்கள் செல்வராஜ்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *