Share on Social Media


2011 பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த ‘காவலன்’ படத்தை திரையிடக்கூடாதென தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு படம் ரிலீஸாகாத சூழல் உருவானது. மிரண்டுபோனார் விஜய். சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸானதும் விஜய் செம ஹேப்பி. காரணம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அவருக்கு ஹிட் படம். திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாக விகடனுக்குப் பேட்டியளித்தார் விஜய். ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் இப்போது என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்” என்றவர் ”நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை” என அந்தப் பேட்டியை முடித்திருந்தார் விஜய்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றதும் தன்னுடைய மக்கள் இயக்கம் அதிமுக-வின் வெற்றிக்கு அணில் போல உதவியதாக அறிக்கைவிட்டார். இந்த அறிக்கையால் விஜய் மீது கொஞ்சம் கவனம் திருப்பினார் ஜெயலலிதா. 2013 ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்தன. மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் மிகப்பெரிய மேடை அமைத்தார்கள். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்ட நேரம். ஒருபக்கம் ‘அம்மா அழைக்கிறார்’ என ஜெயலலிதா கட் அவுட்கள் இருக்க, இன்னொருபக்கம் விஜய் நிகழ்ச்சிக்கு ‘அப்பா அழைக்கிறார்’ என எஸ்.ஏ.சி-யின் கட் அவுட்கள்.

இதை அப்படியே படமாக எடுத்து உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு அனுப்ப கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டார். உடனடியாக விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த ‘தலைவா’ படத்தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை அழைத்து கடுமையாக எச்சரிக்க விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. திமுகவால் ‘காவலன்’ படத்துக்குப் பிரச்னை வந்தததுபோல ‘தலைவா’ ரிலீஸ் அதிமுக-வால் பிரச்னையை சந்தித்தது. அப்போது கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் சந்திக்கப்போக அங்கே காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்டார்கள். கடைசியில் கிட்டத்தட்ட விஜய் மன்னிப்புக் கேட்கும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட ‘தலைவா’ ரிலீஸானது. இப்படித்தொடர்ந்து அவர் படங்கள் ரிலீஸின்போது பிரச்னைகளை சந்திப்பது ‘சர்கார்’ வரைத் தொடர்ந்தது.

‘மெர்சல்’ வரை இளையத்தளபதி விஜயாக இருந்தவர், மெர்சலில் தளபதியாக மாறினார். ‘தளபதி’ என்கிற அடைமொழி அதுவரை மு.க.ஸ்டாலினுக்கே இருந்தது. ஆனால், அதைமீறி அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘சர்கார்’ படத்தில் தளபதி என மாற்றினார் விஜய்.

திமுகவுக்கும், விஜய்க்கும் இடையே விழுந்த விரிசலில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை என்பதற்கு சமீபத்திய தேர்தலும், அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களுமே சாட்சி. ‘’பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் வந்தார்’’ என அவரைவைத்து அடுத்தப்படம் தயாரிக்கும் சேனலிலேயே செய்திவந்தபோது அதை உடனடியாக மறுக்கச்சொல்லி தன் பிஆர்ஓ மூலம் தகவல் சொன்னார் விஜய். மீண்டும் திமுக ஆட்சி அமைத்ததும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் பல்வேறு நடிகர்கள் வாழ்த்தி செய்திகளை வெளியிட, விஜய்யிடம் இருந்து அமைதியே பதிலாக இருந்தது. கொரோனா நிதியை கிட்டத்தட்ட எல்லா முக்கிய நடிகர்களுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டார்கள். அஜித் ஆன்லைன் மூலமாக நிதியளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டுவிட்டார். ஆனால், விஜய்யிடம் இருந்த இதுவரை எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

ரஜினி - விஜய்

ரஜினி – விஜய்

விஜய் ஆதரவு?

காங்கிரஸ் ஆட்சியின்போது ராகுல் காந்தியை சந்தித்ததுப் பரபரப்பைக் கிளப்பினார் விஜய். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை விஜய் கேட்கிறார் எனத் தகவல் பரவி, கொஞ்ச நாளில் அடங்கியது. அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார் விஜய். அடுத்தபடியாக 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது மோடியை சந்திக்க ஒப்புக்கொண்டார் விஜய். கோவையில் மோடி- விஜய் சந்திப்பு நடந்தது. இப்படி ஆரம்பத்தில் திமுக எதிர்ப்பில் தொடங்கிய அவரது அரசியல் நிலைப்பாடு அதிமுக, காங்கிரஸ் என மாறி இப்போது பா.ஜ.க-வில் வந்து நிற்கிறது.

பா.ஜ.க எதிர்ப்புக்கு ஆரம்பப் புள்ளி வைத்தவர் ஹெச்.ராஜா. ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி-க்கு எதிராக விஜய் சில வசனங்கள் பேச ‘’இவர் ஜோசப் விஜய்… இப்படித்தான் பேசுவார்” என விவகாரத்தை ஹெச்.ராஜா திசைமாற்ற, மக்கள் ஆதரவு முழுக்க விஜய் பக்கம் திரும்ப பா.ஜ.க-வை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்தார் விஜய். ‘ஜோசப் விஜய்’ என்கிற லெட்டர் பேடில் அறிக்கை வெளியிடுவது, தொடர்ந்து இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேச்சைக் கலப்பது, படங்களிலும் தன்னுடைய கிறிஸ்துவ அடையாளத்தை பகிரங்கப்படுத்துவது என முன்பைப் போல் அமைதியாக இல்லாமல் எதிர்வினைகள் நிகழ்த்துகிறார்.

ரஜினி – விஜய்!

100 கோடிக்கும் மேல் உயர்ந்த ரஜினியின் சம்பளம் இப்போது குறைந்துவிட்டது என்கிறார்கள். அதேப்போல் ரஜினி படங்களுக்கான பிசினஸும் குறைந்திருக்கிறது. இன்னொரு பக்கம் ‘பிகில்’ படத்துக்கு முன்பு 50 கோடியில் இருந்த விஜய்யின் சம்பளம் இப்போது ரஜினியின் சம்பளத்தை நெருங்கிவிட்டது. வியாபாரம், வசூலைப் பொருத்தவரை ரஜினியை முந்திவிட்டார் விஜய் என்பதே தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் சொல்லும் கணக்கு.

தமிழ் சினிமாவின் உச்சபட்ச மாஸ் ஹீரோ, சூப்பர் ஸ்டார் அந்தஸ்து விஜய்யிடம் தான் இப்போது வந்து நிற்கிறது. ‘அண்ணாத்த’ படத்துக்குப்பிறகு ரஜினி ஒன்றிரண்டு படங்களே நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதனால், ரஜினியின் இடத்துக்கு விஜய் வந்துவிட்டாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் விஜய் என்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *