Share on Social Media


புதுடில்லி :”இந்திய பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பிரபலப்படுத்த, இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மாணவர்களின் சிந்தனை மற்றும் கற்பனைத்திறன்களை ஊக்குவித்தல், மாணவர்களிடம் தலைமை பண்பை உருவாக்குதல் ஆகியவற்றை லட்சியமாக வைத்துத் தான், புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
நாம் அடுத்த ஆண்டு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி, ‘யுவ’ என்ற பெயரில், தேசிய அளவிலான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக, 30 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழு உருவாக்கப்படும். சர்வதேச அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் வகையில் சிறப்பாக எழுதும் இளம் எழுத்தாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய பாரம்பரியம், கலாசாரம், சிந்தனை, இலக்கியம் ஆகியவற்றை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில் எழுத வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய புத்தக அறக்கட்டளை இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. mygov.in இணையதளம் வழியாக நடத்தப்படும் போட்டியின் முடிவில், 75 சிறந்த இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *