Share on Social Media

300 – 549 வரையிலும் இருக்கும் கிரெடிட் ஸ்கோர் இருப்பதிலேயே மோசமானதாகக் கருதப்படுகிறது. இதை வைத்திருப்பவர் கடன் பெறும் தகுதியற்றவர் என முத்திரை குத்தப்படுவார்.

550 – 649 என்றிருக்கும் ஸ்கோரும் மோசமானதுதான் என்றாலும் கடன் கொடுக்கத் தடைக்கல்லாக இருக்காது. ஆனால், இந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் கூடுதலாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

650 – 699 வரை ஸ்கோர் இருப்பவர்கள் ஒப்பேரி விடுவார்கள் எனும் கேட்டகிரி. `ஓகே இவர்களுக்குக் கொடுக்கலாம்’ எனும் நம்பிக்கையைக் கொடுக்கும் ஸ்கோர் இது. மேலும், இவர்களுக்கான கடன் மீதான வட்டி விகிதம் மேலே சொன்னதைவிட சற்றே குறையும்.

700 – 749 நல்ல ஸ்கோர். இந்த ஸ்கோர் உடையவர்களுக்குக் கடன் கிடைப்பதில் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்காது. குறைந்த அளவு வட்டியுடன் கடன் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

750 – 850… பார்த்த மாத்திரத்தில் `யூ ஆர் செலக்டட்’ எனச் சொல்ல வைக்கும்படியான ஸ்கோர் இது.

சிபில் ஸ்கோரை எப்படி அறியலாம்? அதற்குக் கட்டணம் உண்டா?

மேலே பார்த்தது போல நம் மைய வங்கி அனுமதி பெற்ற நான்கு கடனாளர் மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவை நான்கும் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகக் கடனாளர் மதிப்பீட்டெண்ணை நமக்குக் கொடுக்க வேண்டும். சிபில் முதற்கொண்டு அந்த நான்கு நிறுவனங்களின் இணைப்புகளும் கீழே உள்ளன. அதில் காலாண்டுக்கு ஒரு முறை உங்கள் மதிப்பீட்டெண்ணைப் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வகையில் ஆண்டுக்கு நான்கு முறை சரிபார்த்துக் கொள்ளலாம்.

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படுகிறது? எது நல்ல கிரெடிட்ஸ்கோர்? இப்படி பல விவரங்களைப் பார்த்தோம். நல்ல கிரெடிட் ஸ்கோர் எதனால் இருக்க வேண்டும் என்பதையும், ஒருவேளை கிரெடிட் ஸ்கோர் இல்லாததால் சந்திக்கப்போகின்ற சாதக, பாதகங்களையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் தோழிகளே!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *