Share on Social Media



வாஷிங்டன்: இலங்கை மற்றும் ஜப்பானில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாடுகளுக்கான பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘ஜப்பான், இலங்கை செல்ல வேண்டிய தேவை இருக்கும்பட்சத்தில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். ஜப்பானில் தற்போதைய  சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *