Share on Social Media


“தமிழகத்தில் கொடுத்த நெருக்கடிதான் இதற்கான ஆரம்பப்புள்ளியா?” என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர், தோழர் தியாகுவிடம் பேசினோம்,

“அம்பாந்தோட்டா விவகாரத்தில் இந்திய அரசு தலையிடக்கூடாது என தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், தமிழக மக்கள் என யாரும் எப்போதும் சொன்னது இல்லை. அதனால், அப்படிச் சொல்வது தவறான கருத்து. இலங்கை, சீனாவுக்கு தீவுகளைத் தாரைவார்ப்பதை நாம் ஒருபோதும் ஆதரித்ததும் இல்லை. இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால்தான் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கொழும்பு துறைமுகத்தில், கிழக்கு முனையத்தை அதானி குழுமத்துக்கு வாங்கிக் கொடுத்ததோடு பா.ஜ.க அரசு தன் கடமை முடிந்துவிட்டது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது. கொழும்பு துறைமுக நகரம் குறித்தோ, அம்பந்தோட்ட குறித்தோ எந்தக் கவலையும் கிடையாது. வடக்கில் இருந்து பகையை தெற்கில் கொண்டு வந்து நிறுத்தியதில் தற்போதைய பா.ஜ.க அரசுக்கு மட்டுமல்ல காங்கிரஸ் அரசுக்கும் பங்கிருக்கிறது.

தோழர் தியாகு

தோழர் தியாகு

இந்தியப் பெருங்கடலில் தமிழ்ப் பகுதிகளின் ஆதரவைப் பெருவதில் இந்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. ஐ.நாவில் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்திய அரசு தவறிவிட்டது. தமிழர் விரோத, வெளியுறவுக் கொள்கைகளால்தான் இந்தியா இந்த நிலைமையில் வந்து நிற்கிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டால் மட்டுமே இலங்கையில் இந்தியா தன் இருப்பைத் தக்கவைக்க முடியும்” என்கிறார் அவர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *